Day: June 27, 2026
தியத்தலாவையில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் பேருந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில்மேலும் படிக்க...
யாழ். வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 8 பேர் கைது ; படகு, வலைகள் கைப்பற்றப்பட்டன

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து படகு மற்றும் வலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் வெள்ளிக்கிழமை (26) கடற்படையினர் கடலிலும் கடற்கரைப் பகுதிகளிலும்மேலும் படிக்க...
ஹோர்முஸில் இருந்து கப்பல்களை வெளியேற்றும் பணிகளில் தடங்கல்கள்

ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்களை வெளியேற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பின் திட்டத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் சென்றுகொண்டிருந்த தைவானைச் சேர்ந்த ‘நுஎநச டுழஎநடல’ என்ற சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று முதல்மேலும் படிக்க...
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்? – இன்று அதிகார பூர்வமாக அறிவிக்கிறார் வைகோ

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுகிறதா? என்பது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இன்று அறிவிக்கவுள்ளார். கடந்த 2017 முதல் திமுக கூட்டணியில் மதிமுக தொடர்ந்து நீடித்து வருகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டமேலும் படிக்க...
உணவுப் பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தினால் தொற்றா நோய்களைக் கட்டுப் படுத்தலாம்: சமூக மருத்துவர் அஹ்மட் ஷியாம்

தற்காலத்தில் அதிகரித்து வரும் தொற்றா நோய்களுக்கான முக்கிய காரணியாக ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் காணப்படுவதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் சிரேஷ்ட பதிவாளரும், சமூக மருத்துவருமான அஹ்மட் ஷியாம் தெரிவித்துள்ளார். ‘சூரியனின் விழுதுகள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.மேலும் படிக்க...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரை ஹொரணை விசேட குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளனர். வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, சந்தேக நபரான பெண் 20 இலட்சம் ரூபாய் மோசடி செய்தமை தொடர்பில் ஹொரணைமேலும் படிக்க...
வடக்கில் தெங்கு சார்ந்த தயாரிப்பு கைத்தொழில்களை நிறுவுவதற்கு அதிகபட்ச ஆதரவு

தெங்கு மற்றும் உணவுப் பொருட்கள் சார்ந்த ஏற்றுமதித் துறையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 03 பில்லியன் டொலர் பொருளாதாரமாக கட்டியெழுப்புவது தொடர்பாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் தெங்கு மற்றும் உணவுப் பொருட்கள் சார்ந்த உற்பத்தி தொழிற்துறையினருக்கும் இடையிலான கலந்துரையாடல்,மேலும் படிக்க...
வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம்: உயிரிழப்புகள் 920 ஆக உயர்வு

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இன்றைய தினம் (27) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமும் அந்நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியை மையமாகக் கொண்டே ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை வெனிசுலாமேலும் படிக்க...
பிரபல நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் காலமானார்

பிரபல நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ் சினிமாவில் தனது தனித்துவ திரைக்கதை பாணியால் வெகுவாக ஈர்த்தவரும், நகைச்சுவையுடன் கூடிய நடிப்பாற்றலால் ரசிகர்களை மகிழ்வித்தவருமான பாக்யராஜின் இழப்பால் தமிழ்த் திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. பெரும் சோகத்தைமேலும் படிக்க...
