Main Menu

ஹெய்டி ஜனாதிபதி படுகொலை: நான்கு பேர் சுட்டுக்கொலை- இருவர் கைது!

ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, நான்கு பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதோடு இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு பின்னணியில் அரசியல் தலைவர்கள் சிலர் இருக்கலாம் என்று கருதப்படுகின்ற நிலையில் இதுதொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹெய்டியின் இடைக்கால ஜனாதிபதி கிளாட் ஜோசப் கூறுகையில், ‘ஜனாதிபதி கொலை செய்யப்பட்டாலும் நாட்டின் பாதுகாப்பு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது.

இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என கூறினார்.

தென் அமெரிக்கா- வட அமெரிக்கா கண்டத்துக்கு மத்தியில் அமைந்துள்ள தீவு நாடான ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ், தனது பதவிக்காலம் முடிந்த போதும், ஓராண்டு காலம் பதவியில் நீடிக்கப்போவதாக அறிவித்தார்.

இதனால் எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தன. இந்த நிலையில் அவரது வீட்டுக்குள் புகுந்த ஆயுத கும்பல், ஜனாதிபதி ஜோவனல் மோஸ் மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கி சூடு நடத்தியது.
இதில் ஜனாதிபதி ஜோவனல் மாய்சே உயிரிழந்தார். அவரது மனைவி மார்ட்டின் மோஸ்

ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பகிரவும்...