Main Menu

ஸ்பெயினில் கடுமையான பனி: போக்குவரத்து ஸ்தம்பிதம்!

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கடுமையான பனிப்புயல் வீசி வருவதால், போக்குவரத்து ஸ்தம்பித்து போயுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவுநேரக் குறைந்தபட்ச வெப்பநிலை மறை 35 டிகிரி செல்சியசாகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் பனிப்புயல் வீசியதில் தரையெங்கும் பனி உறைந்து காணப்படுகிறது. இதனால், போக்குவரத்து முடங்கியதால் வாகனங்கள் ஆங்காங்கே சிக்கித் தவிக்கின்றன.

நானூற்றுக்கு மேற்பட்ட நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் வாகனங்கள் ஆங்காங்கே சிக்கித் தவிக்கின்றன. மட்ரிட் விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது.

துருப்புக்கள் இன்று சனிக்கிழமையன்று தங்கள் வாகனங்களில் இருந்து சிக்கியுள்ள சாரதிகளை பாதுக்காப்பாக மீட்டனர்.

‘பனியின் முன்னறிவிப்பு மற்றும் பாதுகாப்பு காரணமாக, மட்ரிட் பராஜாஸ் விமான நிலையம் சனிக்கிழமை முழுவதும் மூடப்படும்’ என்று நாட்டின் விமான நிலையங்களைக் கட்டுப்படுத்தும் ஈனா ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

மட்ரிட் மற்றும் தென்கிழக்கு அலிகாண்டே மற்றும் வலென்சியாவிற்கும் இடையேயான அதிவேக ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன,

பகிரவும்...