Main Menu

ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன்- ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20ஆம் திகதி ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

ஜோ பைடனின் வெற்றியை காங்கிரஸ் உறுதிப்படுத்திய நிலையில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் புதன்கிழமை வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த வன்முறையில், ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் டொனால்ட் ட்ரம்ப் தாமதித்து வன்முறைக்கு கண்டனம் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வன்முறைச் சம்பவம் உலகத் தலைவர்களின் கண்டனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.

இதேவேளை, தமது பதவிக்காலத்தில், தமது குடும்பத்தினர், ஆலோசகர்கள் மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஏதேனும் குற்றம் செய்திருந்தால் அதற்கான மன்னிப்புப் பட்டியலை ட்ரம்ப் தயார் செய்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் 19ஆம் திகதியுடன் அமெரிக்க ஜனாதிபதி பதவியில் இருந்து ட்ரம்ப் விடைபெறுகின்ற நிலையில் அன்றைய தினமே இந்தப் பட்டியலை வெளியிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு அவர் மன்னிப்பு வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...