Day: January 9, 2021
அமெரிக்காவின் கொள்கையில் ஒருநாளும் எந்த ஒரு மாற்றமும் வரப்போவதில்லை: வடகொரியா தலைவர்!
அமெரிக்காவின் கொள்கையில் ஒருநாளும் எந்த ஒரு மாற்றமும் வரப்போவதில்லை என வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். ஆளும் தொழிலாளர் கட்சி மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்கா தங்களது மிகப்பெரியமேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் தூபியைத் தகர்த்தமை படுபாதகச் செயல்- ரிஷாட் கண்டனம்!
யாழ். பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இரவோடிரவாக தகர்க்கப்பட்டமை அநகாரிக செயல் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நினைவிட அழிப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
சர்வாதிகாரம் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும்- முள்ளிவாய்க்கால் நினைவிட இடிப்பு குறித்து தினகரன்!
முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியளிக்கிறது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டீ.டீ.வி.தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த செயற்பாட்டுக்கு அவர் கண்டனமும் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
எமது உரிமைகள், உணர்வுகளை அழிக்க முடியாது- நினைவுத்தூபி அழிப்புக்கு சாணக்கியன் கடும் கண்டனம்!
எமது உரிமைகள், உணர்வுகளை அழிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியைமேலும் படிக்க...
ஜெனிவா அமர்வு தொடர்பாக தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்த வரைபு விரைவில் வெளியிடப்படும்- சுமந்திரன்
ஜெனிவா அமர்வு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மூன்று கட்சிகளின் தலைவர்களின் கலந்துரையாடலில் வரையப்பட்ட வரைபு சிறிய மாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஜெனிவா விடயங்களைக் கையாள்வதற்கு ஒருமேலும் படிக்க...
தமிழ் இன எழுச்சியின் அடையாளத்தை அழிக்கும் செயலை முறியடிக்க வேண்டும்- மயூரன்
தமிழ் இன எழுச்சியின் அடையாளமாக திகழும் நினைவு முற்றத்தை அழிக்க எத்தனிக்கும் எதிரிகளின் செயல்களை முறியடிப்பது, தமிழர்களின் கடமையாகுமென முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம்மேலும் படிக்க...
ஸ்பெயினில் கடுமையான பனி: போக்குவரத்து ஸ்தம்பிதம்!
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கடுமையான பனிப்புயல் வீசி வருவதால், போக்குவரத்து ஸ்தம்பித்து போயுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவுநேரக் குறைந்தபட்ச வெப்பநிலை மறை 35 டிகிரி செல்சியசாகப் பதிவாகியுள்ளது. இந்நிலையில் பனிப்புயல் வீசியதில் தரையெங்கும் பனி உறைந்து காணப்படுகிறது. இதனால், போக்குவரத்து முடங்கியதால்மேலும் படிக்க...
ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன்- ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20ஆம் திகதி ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார். ஜோ பைடனின் வெற்றியை காங்கிரஸ் உறுதிப்படுத்திய நிலையில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் புதன்கிழமை வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில், ஐந்து பேர்மேலும் படிக்க...
தன்னிச்சையாக தடுப்பூசி ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியாது- உறுப்பு நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு!
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மருந்து நிறுவனங்களுடன் தனித்தனியாக தடுப்பூசி ஒப்பந்தங்களுகக்கான பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு அனுமதிக்கப்படாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் இன்று அறிவித்துள்ளார்.,பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே அவர்மேலும் படிக்க...
கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிங்கப்பூர் பிரதமர்!
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், பிரதமர் லீ சியன் லூங், நேற்று (வெள்ளிக்கிழமை) தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தொற்று பரவல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமேலும் படிக்க...
சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 12ஆம் ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 12வது நினைவு தின நிகழ்வு, மட்டு.ஊடக அமையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் தீபச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஒரு நிமிடம்மேலும் படிக்க...
யாழ்.பல்கலைக் கழக நினைவுத் தூபி இடிப்புக்கு எதிராக தொல்.திருமா வளவன் கண்டனம்
யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி இடிப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளதாவது, “இனவெறியர்களின் ஆணவப்போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றோம். மேலும், இலங்கை அரசாங்கத்தால் இடிக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி மீண்டும் நிறுவப்பட வேண்டும். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்மேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிப்பு: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
யாழ்ப்பாண பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்துத் தகர்க்கப்பட்டமைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், குறித்த செய்தி தனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உலக தமிழர்களை பெரும் வேதனையில்மேலும் படிக்க...
தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது போராட்டம்- உண்ணா விரதத்தில் சில மாணவர்கள்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சற்று முன்னர்மேலும் படிக்க...
முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடிக்கப் பட்டமைக்கும் தமக்கும் தொடர்பில்லை
முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நினைவுத் தூபி இடிக்கப்பட்டமை, பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானம் என தெரிவித்துள்ள அவர், அந்த விடயத்திற்கும் இராணுவத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்றும்மேலும் படிக்க...
அரசாங்கம் தமிழர்களை இலங்கையர்களாக கருத மறுக்கின்றது- மனோ கணேசன்
அரசாங்கம் தமிழர்களை இலங்கையர்களாக கருத மறுக்கின்றதென முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு தமிழ் அரசியல் பிரமுகர்கள் மற்றும் வெளிநாட்டு அரசியல்வாதிகள் என பலரும் கண்டனத்தை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்மேலும் படிக்க...