Main Menu

வேளாண் சட்டங்கள் : இதுவரை 60 விவசாயிகள் உயிரிழப்பு!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதற்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயித் கூறுகையில் “டெல்லி போராட்டத்தில் இதுவரை 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 16 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி உயிரிழக்கிறார். இதற்கு பதில் சொல்லவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு” எனத் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதைத் தவிர வேறு எந்த தீர்வையும் விவசாயிகள் பரிசீலனை செய்ய மாட்டார்கள் என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ள நிலையில், இதுவரை எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை.

பகிரவும்...