Main Menu

வேளாண் சட்டங்களை புரிந்து கொள்ளாமல் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக குற்றச்சாட்டு

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து சரியாகவோ, முழுமையாகவோ புரிந்துகொள்ளாமல் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக நிதி ஆயோக்கின் விவசாய உறுப்பினர் ரமேஷ் சந்த் தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தினால், விவசாயிகளின் வருமானம் பல மடங்கு உயரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சில மாநிலங்களில் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயரவும் வாய்ப்புள்ளது என்றும் அவர் விளக்கியுள்ளார்.

தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகளின் விலை 50 சதவிகிதம் அதிகரித்தால், அத்தியாவசிய பொருள் சட்டம் அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று வெங்காயம் அல்லது உருளைக்கிழங்கின் விலை 100 சதவிகிதம் உயர்ந்தாலும் அத்தியாவசிய பொருள் சட்டம் பாயும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பகிரவும்...