முதலமைச்சர் விஜய் திங்கட்கிழமை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்ல திட்டம்
எதிர்வரும் திங்கட்கிழமை மதுரைக்கு செல்லும் தமிழக முதலமைச்சர் விஜய், மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்ல
திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதலமைச்சரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலமைச்சரான பின்னர் ஜோசப் விஜய் முதன்முறையாக மதுரைக்கு வருவதால், வானூர்தி நிலையத்தில் இருந்து அரச ராஜாஜி மருத்துவமனை வரை பாதுகாப்பு குறித்து, காவல்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இதனிடையே முதலமைச்சரை வரவேற்கும் வகையில் ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டிடங்கள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு வருகின்றன.
மேலும், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த வீதிகள் சீரமைக்கப்படும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
