Main Menu

கொரோனா வைரஸ் எதிரொலி : தாஜ்மஹாலை மூட வலியுறுத்தல்!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆக்ரா மேயர் நவீன் ஜெயின்  மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடித்தில் மேலும் தெரிவித்துள்ள அவர், “கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் இருக்க தாஜ்மஹால் மற்றும் நாடு முழுவதும் உள்ள முக்கியமான தொல்பொருள் மற்றும் கலாச்சார தலங்களை தற்காலிகமாக மூட வேண்டும்.

தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் இந்த இடங்களை பார்வையிடுகின்றனர். சீனாவுக்கு வெளியே இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நம் நாட்டில் நிலைவரம் கட்டுபாட்டுக்குள் இருக்கிறது என்றாலும் நாம் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக அதிகளவு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமான தாஜ்மஹாலை தற்காலிகமாக மூடுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...