Main Menu

விவசாய சங்க தலைவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்க தலைவர்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், நாளை (வியாழக்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோர் 34 விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் டெல்லியில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வேளாண் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய தனி குழு அமைக்கலாம் என்று அரசு தரப்பில் முன்மொழியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது. தொடர்ந்து நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனத்  தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்திஇ டெல்லியில் பஞ்சாப் ஹரியானா உள்பட பல்வேறு மாநில விவசாயிகள் திரண்டு 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்கள் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அகற்ற வழிவகுக்கும் என விவசாயிகள்  குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும் பெரிய நிறுவனங்களின் கருணையை எதிர்பார்த்திருக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் விவசாயிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

பகிரவும்...