Day: December 2, 2020
லண்டன் சிறையில் நிரவ் மோடி காவல் 29-ந்தேதி வரை நீட்டிப்பு
லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவலை 29-ந்தேதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றார். இந்தியாவின் வேண்டுகோளின்பேரில், கடந்த ஆண்டு மார்ச்மேலும் படிக்க...
மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்: ஜப்பான் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்
ஜப்பான் நாடாளுமன்றம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ளது. கொரோனா தடுப்பு மருந்துஜப்பானின் மிகவும் சக்திவாய்ந்த கீழ் சபையின் ஒப்புதலுக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் மேல் சபையிலும் இன்று நிறைவேற்றப்பட்டதால் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. நோய்த்தடுப்பு மருந்துகளை நிர்வகிக்கும்மேலும் படிக்க...
புரெவி புயல் சற்று முன்னர் கரையை கடந்தது
வங்காள விரிகுடாவில் உருவாகிய புரெவி (Burevi) புயல் கரையை கடந்து இலங்கையினுள் பிரவேசித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. புரெவி புயலின் மையப்பகுதி திருக்கோணமலை மற்றும் முல்லைத்தீவிற்கு இடையில் கரையை கடந்துள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த புயல் நகரும் தடத்தில், மணிக்குமேலும் படிக்க...
ஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் அபராதம்
இத்தாலி நாட்டு ஒழுங்குமுறை ஆணையம் ஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்து இருக்கிறது. இத்தாலி நாட்டின் ஒழுங்குமுறை ஆணையம் ஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.879008769) அபராதம் விதித்து இருக்கிறது. புதிய ஐபோன்களில் வாட்டர் ரெசிஸ்டண்ட்மேலும் படிக்க...
ஜெர்மனியில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார் – பச்சிளம் குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு
ஜெர்மனியில் சாலையில் அதிவேகமாக வந்த கார் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த விபத்துக்குள்ளானதில் பிறந்து 9 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜெர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள நகரம் டிரையர். இங்குள்ள சிமியோன்ஸ்டிராஸ் என்றமேலும் படிக்க...
106 தமிழர்கள் கொல்லப்பட்ட நினைவுகூரலுக்கும் தடை விதிப்பு- சிவசக்தி ஆனந்தன்
கடந்த 1984ஆம் ஆண்டு சேமமடு, செட்டிக்குளம், ஒதியமலைப் பகுதிகளில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் 106 பேரின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். இந்நிலையில், செட்டிகுளம் பகுதியில் நினைவுகூரல் நிகழ்வை நடத்துவதற்கு பொலிஸார் தடை விதித்ததோடு, உயிர்நீத்த உறவுகளை நினைவேந்த அனுமதிக்கமேலும் படிக்க...
கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு- மக்களுக்கு எச்சரிக்கை!
கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிரித்து வருகின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி குளங்களில் இன்று (புதன்கிழமை) இரவு பத்து மணிக்கு கணிக்கப்பட்ட நீரின் அளவின் அடிப்படையில் சில குளங்கள் நாளை வான்பாயும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது,மேலும் படிக்க...
யாழில் மினி சூறாவளி- 40இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்வு!
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை ஆதிகோயிலுக்கு அண்மித்த பகுதியில் வீசிய மினி சூறாவளியால் 40 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்று இரவு இடம்பெயர்ந்துள்ளன. திடீரென வீசிய கடும் காற்றினால் வீடுகள் பல சேதமடைந்ததுடன், மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் அனர்த்தம் காரணமாகமேலும் படிக்க...
சீனாவினால் அனுப்பப்பட்ட சங் -5 விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது!
சந்திரனை ஆய்வு செய்வதற்காக சீனாவினால் அனுப்பப்பட்ட சங் -5 விண்கலம் வெற்றிகரமாக சந்திரனில் தரையிறங்கியுள்ளது. அங்குள்ள பாறைகள் மற்றும் தூசுதுகள்களின் மாதிரிகளை சேகரித்துக்கொண்டு மீளவும் பூமிக்கு வரும் நோக்கத்துடன், ரோபோ தொழில்நுட்பம் கொண்ட இந்த விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. சந்திரனில் ஓசியனஸ் புரோசெல்லரம்மேலும் படிக்க...
வோல்கா பிராந்தியத்தில் 26 பெண்களை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது
வோல்கா பிராந்தியத்தில் 26 பெண்களைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் டடர்ஸ்தானில் ஒருவரை கைது செய்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “வோல்கா வெறி” என அழைக்கப்படும் குறித்த சம்பவத்தில் 2011 மற்றும் 2012 க்கு இடையில் ரஷ்யாவின் மத்திய, வோல்கா மற்றும் யூரல்மேலும் படிக்க...
விவசாயிகளின் பிரச்சினை : கனடா பிரதமருக்கு இந்தியா கண்டனம்!
வேளாண் சட்டமூலங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று (புதன்கிழமை) ஏழாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், இது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தெரிவித்துள்ள கருத்திற்கு இந்தியா கண்டனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகமேலும் படிக்க...
விவசாய சங்க தலைவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்க தலைவர்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், நாளை (வியாழக்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோர் 34 விவசாய சங்கங்களின்மேலும் படிக்க...
புரவி சூறாவளி இன்று இரவு 7.10 மணியளவில் நாட்டை கடக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்
புரவி சூறாவளி திருகோணமலை மற்றும் பருத்தித்துறைக்கிடையிலான முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் இன்று இரவு 7.10 இற்கு நாட்டிற்குள் பிரவேசிக்கும் என எதிர்பார்த்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்போது கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடியுடன் கூடியமேலும் படிக்க...
வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை – அறிவிப்பு வெளியானது!
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை வியாழக்கிழமையும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டமேலும் படிக்க...
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக குமார் ரட்ணம்
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக திரு. பிரபாகரன் குமாரட்ணம் நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்திருந்தார். கண்டி மாவட்டத்தின் புஸ்ஸல்லாவ நகரில் பிறந்த இவர். தலவாக்கலை, தேவிசிறிபுரவில் வசித்த திரு.குமாரரட்ணம் மற்றும் காலஞ்சென்ற லீலாவதி ஆகியோரின் கனிஸ்ட புதல்வராவார். புஸல்லாவமேலும் படிக்க...