Main Menu

வன்முறைச் சம்பவங்களின் அதிகரிப்பு – மெக்ஸிகோவில் பதினான்கு உடல்கள் கண்டெடுப்பு

மெக்ஸிகோவில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் சாகடேகஸ் மாநிலத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பதினான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

மரணத்திற்கான காரணம் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மாநில அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சடலங்கள் வீதிகளின் ஓரத்தில் போர்வைகளினால் போர்த்தப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாட்டின் பெரும்பகுதியில் மக்கள் வீட்டிலேயே இருப்பதால் மெக்ஸிகோவில் கொரோனாவினால் இறப்பு எண்ணிக்கை குறைந்துவிட்டாலும், கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்தே செல்கின்றன.

இதேவேளை நேற்று வெள்ளிக்கிழமை மெக்ஸிகோ நகர பொலிஸ் தலைமை அதிகாரி ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

மேலும் இந்த தாக்குதலில் அவரது மெய்க்காப்பாளர்கள் இருவர் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...