Main Menu

லண்டனில் இரண்டாவது முறையாக தாக்குதலுக்கு உள்ளான பொலிஸார்!

லண்டனில் இரண்டாவது முறையாக சட்டவிரோத வீதியோர விருந்து நிகழ்வினை கலைக்க முயன்ற போது ஏற்பட்ட மோதலில், பொலிஸார் மீண்டும் தாக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு லண்டனின் நாட்டிங் ஹில்லில் (Notting Hill) நடந்த உரிமம் பெறாத இசை நிகழ்ச்சியில், கூட்டத்தை கலைக்க முயன்றபோது அதிகாரிகள் மீது பொருட்கள் வீசப்பட்டதாக பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. ஆனால் பலத்த காயங்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு லண்டனில் உள்ள ஸ்ட்ரீதம் காமனில் (Streatham Common) மற்றொரு சட்டவிரோத நிகழ்ச்சியையும் அதிகாரிகள் முறித்துள்ளனர்.

பிரிக்ஸ்டனில் (Brixton) புதன்கிழமை இரவு நடந்த ‘உரிமம் பெறாத இசை நிகழ்ச்சியில்’ சத்தம் மற்றும் வன்முறை தொடர்பான புகார்களை அடுத்து, கூட்டத்தை கலைக்க முயன்ற போது 22 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தமை நினைவுக்கூறத்தக்கது.

கொவிட்-19 முடக்கநிலை கட்டுப்பாடுகள் பிரித்தானியாவில் இன்னும் நடைமுறையில் உள்ளன. அதாவது பெரிய கூட்டங்கள் சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...