Main Menu

வதிவிட நுழை விசாவுக்கு புலனாய்வுப் பிரிவின் அனுமதி அவசியம்

வெளிநாட்டவர்கள் சிறிலங்காவில் வதிவிட நுழை விசாவைப் பெற்றுக் கொள்வதற்கு, அரச புலனாய்வுச் சேவையின் அனுமதி (Clearance) அவசியம் என்ற நடைமுறையைக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது, வதிவிட நுழை விசா , பெற்றுக் கொள்வதற்கு உள்துறை அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் பெறப்படும் நடைமுறைக்கு மாறாக, அரச புலனாய்வுச் சேவையின் அனுமதியும் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1000 வெளிநாட்டவர்கள் சிறிலங்காவில் நுழை விசா காலாவதியான நிலையில் தங்கியிருப்பதாக கிடைத்துள்ள தகவல்களை அடுத்து, குடிவரவுத் திணைக்களம்  கடுமையான நுழை விசா நடைமுறைகளை கடைப்பிடிக்கவுள்ளது.

அனைத்துலக காவல்துறையின் கருப்புப்பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் உள்ளிட்டவர்கள் சிறிலங்காவில் வதிவிட நுழை விசாவைப் பெற்றுக் கொள்வதை தடுப்பதற்கே, அரச புலனாய்வுச் சேவையின் அனுமதி பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

பகிரவும்...