Main Menu

சிறிலங்காவில் தற்போது பாதுகாப்பு முற்றிலுமாக உறுதிப் படுத்தப்பட்டுள்ளது – பாதுகாப்புச் செயலர்

சிறிலங்காவில் தற்போது பாதுகாப்பு முற்றிலுமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே பொதுமக்கள் தமது வழமையான பணிகளை அச்சமின்றி முன்னெடுக்கலாம் எனவும், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்,

பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர், உங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிகளில் 24 மணிநேரமும் ஈடுபட்டுள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முப்படையினருக்கும் பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்புத் தர வேண்டும். அவர்கள் 24 மணிநேரமும், உங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போது பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் வழமைபோல தமது நாளாந்த பணிகளில் ஈடுபட முடியும்.

எமது புலனாய்வு அமைப்புகளும், படைகளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நன்கு அறிந்து, உங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன. உங்களின் பாதுகாப்பு எங்களின் பொறுப்பு.

எல்லா பாடசாலைகள், மத வழிபாட்டு இடங்கள், சுற்றுலா தலங்கள், விடுதிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியாகின்ற போலியான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...