Main Menu

வடக்கு மாகாணத்தின் 8 ஆவது ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்றார் திருமதி சார்ள்ஸ்

வடக்கு மாகாணத்தின் 8ஆவது ஆளுநராகவும் முதலாவது பெண் ஆளுநராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் நியமனம் பெற்ற திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்துக்கு இன்று பிற்பகல் ஒரு மணியளவில் வருகை தந்த ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸுக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மதத் தலைவர்களின் ஆசீர்வாங்களைத் தொடர்ந்து உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

அதனைத் தொடர்ந்து வரவேற்பு நிகழ்விலும் கலந்து கொண்டார். நிகழ்வில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையும் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மாகாணநகரசபை முதல்வர் ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து ஆளுநர் உரை இடம்பெற்றது.

ஆளுநரின் கடமையேற்பு நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், வைத்திய சிவமோகன் வடக்கு மாகாணத்தின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், இந்திய துணைத் தூதுவர் பாலச்சந்திரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், வடக்குமாகாணத்திலுள்ள மாவட்ட அரசாங்க அதிபர்கள் மாகாண அதிகாரிகள் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முப்படையைச் சேர்ந்தேர் பொலிஸ் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...