Main Menu

வசந்த விடுமுறைகளில் 12 நாட்கள் வீட்டிலேயே இருக்குமாறு ஜப்பானியர்களுக்கு அறிவுறுத்தல்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கையாக ‘கோல்டன் வார வசந்த விடுமுறைகளை’ வீட்டிலேயே செலவிடுமாறு ஜப்பானியர்களுக்கு அந்நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் மொதுவாக செயற்பட்டதாக அரசாங்கம் மீது அதிருப்தி கொண்டிருந்த ஜப்பானியர்களுக்கு இந்த செய்தி சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதன்படி, டோக்கியோவில் உள்ள அதிகாரிகள் வைரஸ் பரவுவதைத் தடுக்க இன்று (சனிக்கிழமை) முதல் மே 6ஆம் திகதி வரை வீட்டிலேயே இருக்குமாறு மக்களை வலியுறுத்துகின்றனர்

இதுதொடர்பாக டோக்கியோவின் ஆளுநர் கொய்க் யூரிகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டின் அரசாங்கம் நிர்ணயித்த இலக்காக 80 சதவீத மக்களுக்கிடையேயான தொடர்பைக் குறைப்பதில் இந்த காலம் முக்கியமானதாக இருக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதற்கு மெதுவாக பதிலளித்ததற்காக ஜப்பான் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் பல வாரங்களுக்கு முன்னதாகவே, தங்களது குடியிருப்புகளையும், கடைகளையும் உணவகங்களையும் மூடுமாறு கட்டாயப்படுத்தியிருந்தாலும், ஜப்பானில் இதுபோன்றதொரு எவ்வித கட்டுபாடும் விதிக்கப்படவில்லை.

இதனால் ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்று சடுதியாக அதிகரித்தது. குறிப்பாக நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) 29பேர் உயிரிழந்துள்ளனர். இது தினசரி அதிகபட்ச உயிரிழப்பாக பதிவானது.

தற்போது ஜப்பானில் 12,829பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 345பேர் உயிரிழந்துள்ளனர். 1530பேர் குணடைந்துள்ளனர்.

பகிரவும்...