Main Menu

லெபனானில் இருந்து திருப்பி அனுப்பப்படும் சிறிலங்கா இராணுவ அணி

லெபனானில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா படையினர், அடுத்தமாதம் முழுமையாக திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களுக்குப் பதிலாக இந்தோனேசிய இராணுவத்தினரை ஐ.நா பணியில் அமர்த்தவுள்ளதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

லெபனானில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா படையணியின் பணிக்காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையிலேயே, அவர்கள் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதை அடுத்து, ஐ.நா அமைதிப்படைக்கு சிறிலங்கா படையினரை புதிதாக சேர்த்துக் கொள்வதில்லை என்று ஐ.நா முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், லெபனானுக்கு அனுப்பப்படவிருந்த சிறிலங்கா இராணுவ அணியின் பயணம் நிறுத்தப்பட்டுள்ளது.

பகிரவும்...