Main Menu

லத்தீன் அமெரிக்காவில் வேலையின்மை 11.5 மில்லியனாக அதிகரிக்கும்: ஐ.நா கணிப்பு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, லத்தீன் அமெரிக்காவில் கூடுதலாக 11.5 மில்லியன் மக்களை வேலையில்லாத நிலைக்கு தள்ளியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) இணைந்து நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பொருளாதார ஆணையம் (ஈ.சி.எல்.ஐ.சி) மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியவற்றின் புதிய மதிப்பீடு இப்பகுதியில் மொத்தம் 37.7 மில்லியன் மக்கள் இப்போது வேலையில்லாமல் உள்ளதனை காண்பிக்கின்றது.

அத்துடன், லத்தீன் அமெரிக்காவின் பொருளாதாரமும் 5.3 சதவீதம் சுருங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும்...