Main Menu

கொவிட்-19 உதவித்திட்டத்தில் கையெழுத்திடுவதாக பிரேஸில் ஜனாதிபதி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கான, 10.72 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கூட்டாட்சி உதவித் திட்டத்தில் கையெழுத்திடுவதாக பிரேஸிலின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ கூறியுள்ளார்.

ஆனால், பொதுத்துறை ஊதிய உயர்வை முடக்குவதற்கு ஆளுநர்களைக் அவர் கேட்டுக் கொண்டார்.

கூட்டாட்சி பணத்தை மாநிலங்களுக்கும் நகராட்சிகளுக்கும் விநியோகிக்கும் சட்டமூலத்துக்கு இந்த மாத தொடக்கத்தில் காங்கிரஸ் ஒப்புதல் அளித்தது

இருப்பினும், பொருளாதார அமைச்சர் பாலோ கியூடஸின் அழுத்தம் காரணமாக போல்சனாரோ அதில் கையெழுத்திடவில்லை.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ள நான்காவது நாடாக மாறியுள்ள பிரேஸில், அடுத்த கட்ட நடவடிக்கையை நோக்கி நகர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அதிகாரிகளுடனான கலந்லோசனையின் பின்னர், உதவித் திட்டத்தில் கையெழுத்திடுவதாக ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில், பெரிதும் அக்கறை கொள்ளாத பிரேஸிலின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றார்.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவல் கட்டுப்பாடுகளை கடுமையாக எதிர்க்கும் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, அண்மையில் உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் முடி திருத்துமிடங்களை திறந்த நிலையில் இருக்கக்கூடிய அத்தியாவசிய சேவைகளாக அறிவித்தார்.

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, உலகநாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்ற நிலையில், பிரேஸில் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மட்டுமல்லாது உலக நாடுகள் மத்தியிலும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

அத்துடன், இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் நெல்சன் டைக், ஜனாதிபதியுடன் முரண்பட்டு தனது பதவியை இராஜிநாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...