Main Menu

லண்டன் விருது விழாவில் ஹரி – மேகன் கலந்து கொண்டனர்

சசெக்ஸ் இளவரசர் மற்றும் மேகன் ஆகியோர் இந்த மாத இறுதியில் அரச வாழ்க்கையை விட்டு விலகுவதற்கு முன்னர் தமது கடைசி உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த ஆயுதப்படை வீரர்களின் விளையாட்டு மற்றும் சாகச சாதனைகளுக்கான விருது வழங்கும் விழாவிலேயே இளவரசர் ஹரி மற்றும் மேகன் கலந்து கொண்டனர்.

ஆயுதப்படைகளின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் (Endeavour Fund Awards) சாதனைகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு மத்திய லண்டனில் உள்ள மான்சன் ஹவுஸில் நடைபெற்றது.

அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த ஜனவரி மாதம் அவர்கள் அறிவித்த பின்னர் இருவரும் சேர்ந்து கலந்துகொண்ட உத்தியோகபூர்வ நிகழ்வு இதுவாகும்.

10 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய இளவரசர் ஹரி, பதவி விலகும்போது மேஜர், லெப்ரினன்ட் கொமாண்டர் மற்றும் ஸ்குவாட்ரன் லீடர் முதலான பதவிகளில் இருந்தார்.

எனினும் அவரது கெளரவ ராணுவப் பதவிகள் அரச வாழ்க்கையை விட்டு விலகிய பின்னர் இடைநிறுத்தப்படும் என்று கூறப்படுகின்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இளவரசர் ஹரி தெரிவிக்கையில்; ராணிக்கும் நாட்டிற்கும் சேவை செய்வதில் பெருமைப்படுவதாகக் கூறினார்.

நாம் அனைவரும் செய்த சேவைகள் குறித்து பெருமிதம் கொள்கிறோம். அவை ஒருபோதும் நம்மை விட்டு விலகாது.

பல படைவீரர்களும் பெண்களும் எமக்குப் பக்கபலமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். என்னை உங்களில் ஒருவராக எண்ண முடிந்தது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்.

உங்களிடையே பணியாற்றியதில் நான் பெருமிதம் கொள்கிறேன். எங்களது ஆதரவு எப்போது உங்களுக்கு உண்டு என்று இளவரசர் ஹரி மேலும் தெரிவித்தார்.

நன்றி bbc.co.uk

பகிரவும்...