Main Menu

ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணிய நாடாளுமன்ற மொழி பெயர்ப்பாளர் தடுத்து வைப்பு

ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளர் மூன்று மாத காலம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவசர கால சட்டத்தின் கீழ் ஜமால்தீன் நவ்சாத் என்ற சந்தேக நபரே தடுத்து வைத்து விசாரணை செய்யப்படவுள்ளார்.

குருநாகலுக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்றைய தினம் இராஜகிரிய பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

2006 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றி வந்துள்ள குறித்த நபர், நீண்ட காலமாக தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக கருதப்படும் சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்பை பேணிவந்துள்ளதோடு, அதன் செயலப்பாட்டு உறுப்பினர் எனவும் தெரியவந்துள்ளது.

இதனுடன் இவர் கண்டி – அக்குரணை பகுதியில் இஸ்லாமிய அடிப்படைவாத கருத்துக்கள் அடங்கிய பல விரிவுரைகளை ஆற்றியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

பகிரவும்...