Main Menu

ரஷ்ய அதிகாரிகளுக்கும், சிரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை!

ரஷ்ய அதிகாரிகளுக்கும், சிரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

சிரியாவின் தற்போதைய நிலைவரம் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்திஷ் படைகளுக்கு எதிராக, துருக்கி கடந்த ஒருவாரமாக கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.

துருக்கி தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தன.

மேலும் துருக்கி சிரியாவில் போர் குற்றத்தைப் புரிந்ததாக ஆம்னெஸ்டி உள்ளிட்ட பல சர்வதேச தொண்டு நிறுவனங்கள் குற்றம் சுமத்தி வருகின்றன.

இந்தநிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், சிரியாவின் வடக்குப் பகுதியில் போர் நிறுத்தம் தொடர்பாக துருக்கி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் வடக்கு சிரியாவில் 5 நாள் போர் நிறுத்தத்திற்கு துருக்கி ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து சிரியாவில் தற்காலிகமாக தாக்குதல் நிறுத்தப்படுவதாக துருக்கி அறிவித்தது.

இந்நிலைலேயே சிரிய ஜனாதிபதி ரஷ்ய அதிகாரிகளைச் சந்தித்து பேசியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பகிரவும்...