Main Menu

ரஷ்யா படையெடுப்பால் உக்ரைனுக்கு 564.9 பில்லியன் டொலர்கள் இழப்பு!

ரஷ்யா படையெடுப்பால் உக்ரைனுக்கு 564.9 பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, உக்ரைன் பொருளாதார அமைச்சர் யூலியா ஸ்விரிடென்கோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சமூக வலைத்தள பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘இந்த இழப்பில், உட்கட்டமைப்பு, பொருளாதார இழப்பு உள்ளிட்டவை அடங்கும்.

இதனால், 8,000 கி.மீ தொலைவிலான வீதிகள் சேதமடைந்துள்ளது. 10 மில்லியன் சதுரமீட்டர்கள் அளவுக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ரஷ்யர்கள் சுமார் 1 லட்சம் கோடி அமெரிக்க டொலர்கள் அளவுக்கான பணத்தை வெளிநாடுகளில் கருப்புப் பணமாக பதுக்கியிருப்பதாக அட்லாண்டிக் சபை என்ற அமெரிக்க சிந்தனைக் குழுமம் கூறியுள்ளது.

உக்ரைனில் கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி, சிறப்பு இராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்ததில் இருந்து, 7,000 முதல் 15,000 ரஷ்யர்கள் உயிரிழந்ததாக நேட்டோ கூறுகின்றது.

ஆனால், இந்த கருத்தை மறுத்து சுமார் 1,300க்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புக்கள் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய கர்னல் ஜெனரல் செர்ஜி ருட்ஸ்காய் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உயர்கல்வி, கடன் மன்னிப்பு மற்றும் வீட்டு உதவித்தொகை உள்ளிட்டவைகளை அரசே ஏற்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...