Day: February 23, 2021
பாகிஸ்தான் – இலங்கைக்கு இடையில் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்து
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான நேரடி இருதரப்பு பேச்சுவார்த்தை அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஐந்து உடன்படிக்கைகள்மேலும் படிக்க...
பேரணி மூலமாக அரசுக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கின்றது – எஸ்.சிவயோகநாதன்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி மூலமாக அரசுக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கின்றது என்பதுதான் விசாரணைகள் மூலம் நாங்கள் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது என சிவில் அமைப்புக்களின் இணைத்தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்தார். அண்மையில் இடம்பெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிமேலும் படிக்க...
நாட்டை வந்தடைந்தார் பாகிஸ்தான் பிரதமர் !
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார். பிரதமருடன் வந்த பாகிஸ்தான் விமானப் படையின் விசேட விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. இலங்கை வந்தடைந்த பிரதமர் இம்ரான் கானை விமான நிலையத்திற்குமேலும் படிக்க...
சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

தமிழ் தேசியக் கட்சியின் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையில் தனது வீட்டிலிருந்த அவருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டது. இந்நிலையில், நோயாளர் காவுவண்டி மூலம் பருத்தித்துறை ஆதாரமேலும் படிக்க...
100 பேர் கலந்துகொண்ட ரகசிய விருந்து! – காவல் துறையினர் மீது கல்வீச்சு
இரவு நேர ரகசிய விருந்து ஒன்றை தடுத்து நிறுத்த முற்பட்ட காவல்துறையினர் மீது கல்வீச்சி இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் Saint-Gratien (Val-d’Oise) நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இங்கு rue des Raguenets வீதியில் பலர் கூடியிருப்பதையும், எவரும் முகக்கவசம் அணியாமல் சுகாதார நடைமுறைகளைமேலும் படிக்க...
போர்த்துகலில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!
போர்த்துகலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போர்த்துகலில் ஏழு இலட்சத்து ஆயிரத்து 409பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது நாடாக விளங்கும் போர்த்துகலில் இதுவரைமேலும் படிக்க...
ட்ரம்ப்பின் வருமான வரி ஆவணங்களை ஆய்வு செய்வதற்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வருமான வரி ஆவணங்களை ஆய்வு செய்வதற்குத் தடை விதிக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ட்ரம்ப் தனது வருமான வரியை மிகவும் குறைத்து செலுத்தியதாகப் புகார் எழுந்ததையடுத்து, ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோதே அவருக்கு எதிராக வழக்குத்மேலும் படிக்க...
இறையாண்மையும் பாதுகாப்பையும் குறை மதிப்புக்கு உட்படுத்துவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்: சீனா
சீனாவின் இறையாண்மையும் பாதுகாப்பையும் குறை மதிப்புக்கு உட்படுத்துவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற சீன வெளியுறவு அமைச்சகத்தின் வருடாந்திர மாநாட்டின் போது உரையாற்றுகையிலேயே வெளியுறவு அமைச்சர் வாங் யி இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர்மேலும் படிக்க...
ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளதார தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஜேர்மனி ஆதரவு!
ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம், புதிய பொருளதார தடைகளை விதிக்க முழு ஆதரவினை வழங்குவதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜேர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹைக்கோ மாஸ் கூறுகையில், ‘கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை சிறையில் அடைத்துள்ளது அந்த நாடு மனிதமேலும் படிக்க...
புதிதாக அமைக்கப்படும் அயோத்தி விமான நிலையத்துக்கு இராமரின் பெயர் சூட்ட முடிவு!
அயோத்தியில் கட்டப்பட்டுவரும் விமான நிலையத்துக்கு ‘மரியாதா புருஷோத்தம் ஸ்ரீராம் விமான நிலையம்’ எனப் பெயர் சூட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச சட்டசபையில் 2021-2022ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை மாநில நிதியமைச்சர் சுரேஷ் கன்னா நேற்று தாக்கல் செய்தார். அந்தத் திட்டத்தில்,மேலும் படிக்க...
தமிழக அரசின் கடன் சுமை 5.7 இலட்சம் கோடி ரூபாயாக உயர்வு – நிதியமைச்சர்
தமிழக அரசின் கடன் சுமை 5.7 இலட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவு செலவுத் திட்டத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,மேலும் படிக்க...
பாகிஸ்தான் பிரதமருடனான முஸ்லிம் தலைவர்களின் சந்திப்பு பாதுகாப்பு அடிப்படையில் இரத்து
இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அனைத்து இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சந்திப்பு பாதுகாப்பு அடிப்படையில் இரத்து செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் கெஹலியா ரம்புக்வெல்ல இன்றுமேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராடிய 84 உறவுகள் இதுவரை உயிரிழப்பு!

காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராடி வந்த 84 உறவுகள் இதுவரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்துள்ளனர். வடக்குக் கிழக்கில் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள், தமது பிள்ளைகளின் விடுதலையை வலியுறுத்திப் பல்வேறு போராட்டங்களை நீண்ட காலமாகமேலும் படிக்க...
நள்ளிரவில் இளம் பெண் கடத்தப்பட்டார்
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வெள்ளைவான் ஒன்றில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் யுவதியொருவரைக் கடத்திச் சென்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கடத்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தலைமையிலான குழுவினரேமேலும் படிக்க...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் : மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைக்கு பரிந்துரை

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்தமேலும் படிக்க...
புதிய அரசியலமைப்பு தொடர்பாக கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கைகள் ஒருபோதும் நிறைவேறாது – திஸ்ஸ விதாரன
புதிய அரசியலமைப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்துள்ள கோரிக்கைகள் ஒருபோதும் நிறைவேறாது என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில்மேலும் படிக்க...