Main Menu

ரஷ்யாவில் தொடர்ச்சியாக நான்காவது நாளாகவும் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, தொடர்ச்சியாக நான்காவது நாளாகவும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 10,559பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 37பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 165,929ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 1,537ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 143,065பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2,300பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 21,327பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...