Main Menu

ஜூன் மாதம் நடுப்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும்? – லக்ஷமன் யாப்பா

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் நடுப்பகுதியில் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பலமான அரசாங்கம் தோற்றம்பெற வேண்டுமாயின் தேர்தல் முறையில் திருத்தம் செய்வது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், “கொரோனா வைரஸ் தாக்குதல் தற்போது ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளன.

பொதுத் தேர்தலை அடுத்து நடத்துவதே அனைத்துத் தரப்பினரதும் எதிர்பார்ப்பாகும். ஜூன் மாதம் நடுப்பகுதியில் பொதுத்தேர்தல் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

பலமான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டுமாயின் தேர்தல் முறைமையில் திருத்தம் செய்ய வேண்டும். ஆனால் தற்போது தேர்தல் முறைமையில் திருத்தம் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.

பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான மக்கள் ஆதரவு அரசாங்கத்துக்கு கிடைக்கும். பொதுத் தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்துவதே அரசாங்கத்தின் அடுத்த இலக்கு” என்று குறிப்பிட்டார்.

பகிரவும்...