Main Menu

ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 24ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24ஆயிரத்தைக் கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் 24ஆயிரத்து 2பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 84ஆயிரத்து 235பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ரஷ்யாவில் 14ஆயிரத்து 922பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்ததோடு, 279பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இரண்டு இலட்சத்து 95ஆயிரத்து 34பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதவிர ரஷ்யாவில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் பத்து இலட்சத்து 65ஆயிரத்து 199பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...