Main Menu

ரஷிய ராணுவ வீரர்கள் 20 ஆயிரம் பேர் பலி- அமெரிக்கா தகவல்

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தாக்குதல் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் ரஷிய ராணுவத்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை உக்ரைன் போரில் 20 ஆயிரம் ரஷிய வீரர்கள் பலியாகி உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 80 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித்தொடர்பாளர் ஜான் கெர்பி கூறும்போது கடந்த 5 மாதத்தில் ரஷிய வீரர்கள் 20 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாக கணித்துள்ளோம். பக்முத் வழியாக டான்பாஸ் பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தும் ரஷியாவின் முயற்சி தோல்வி அடைந்தது ரஷ்யாவால் முக்கியத்துவம் வாய்ந்த எந்த பகுதியையும் கைப்பற்ற முடியவில்லை என்றார்.

பகிரவும்...