Main Menu

ரஜினிகாந்த்துக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு?

நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம், விசா வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் தமிழகத்துக்கு சென்றிருந்த வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நடிகர் ரஜினிகாந்தை சநதித்து பேச்சு நடத்தியிருந்தார். .இந்த சந்திப்பில் ரஜினியின் அரசியல் திட்டங்கள் குறித்து விக்னேஸ்வரன் கேட்டறிந்தார். மேலும் இந்தியாவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், தமிழர்கள் பிரச்சனை, திரைப்பயணம் குறித்தும் பேசினார்கள்.

அதேபோல் இலங்கை வருமாறும், அங்கிருக்கும் தமிழ் மக்களை சந்திக்குமாறும் அரசியல் ரீதியான கூட்டங்களில் அங்கு கலந்து கொள்ள வேண்டும் என்றும் ரஜினிக்கு விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. “யாழ்ப்பாணத்திற்கு வருகை தர உள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இயலாது. அவர் அரசியல் நடவடிக்கைகாக இலங்கை வருகிறார். அவர் மக்களை சந்திக்க வாய்ப்புள்ளது. அரசியல் திட்டங்களை செயல்படுத்த இலங்கை அரசு எப்போதும் விசா வழங்காது. இதனால் ரஜினிக்கும் விசா வழங்க முடியாது” என்று கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பகிரவும்...