Main Menu

யோவரி முசவேனி ஆறாவது முறையாக மீண்டும் தேர்வு

35 ஆண்டுகளாக உகண்டாவில் ஆட்சியில் இருந்த 76 வயதுடைய யோவரி முசவேனி ஆறாவது முறையாக ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1986 முதல் நாட்டின் தலைவரான யோவரி முசவேனி சனிக்கிழமையன்று 58,64% வாக்குகளைப் பெற்று ஆறாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது

57,22% வாக்குப்பதிவு இடம்பெற்ற இந்த தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட போபி ஒயின் 34,83% வாக்குகளைப் பெற்றார் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரசியல் மாற்றத்திற்கான உகண்டா மக்களை அணிதிரட்டிய 38 வயதான சட்டமன்ற உறுப்பினர் ஒயின், தேர்தல் முடிவுகளை மோசடி என தெரிவித்துள்ளார்.

இது இராணுவம் மற்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட ஒரு தேர்தல் என்றும் இது முசவேனி ஆட்சி எவ்வளவு சர்வாதிகாரமானது என்பதை மேலும் அம்பலப்படுத்துகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பகிரவும்...