Main Menu

யாழில் லஞ்ச்சீற் பயன்படுத்தப்படும் உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை ;மாநகர முதல்வர்

யாழ். மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் தடை செய்யப்பட்ட லஞ்ச்சீற்பயன்படுத்தப்படும் உணவகங்கள் மீது உடன் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் உத்தரவிட்டுள்ளார்.

மாநகர சபை எல்லைப் பரப்பிற்குள் உள்ள எந்தவொரு உணவகங்களிலும் லஞ்ச்சீற் பாவிக்ககூடாது என பொது அறிவித்தல் வழங்கப்பட்டு அதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டது. இருப்பினும் லஞ்ச்சீற்பாவனை தொடர்வதனால் அதனை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இதனால் உடனடியாக பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களூடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே உடனடியாக பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் உணவகங்களில் பரிசோதனை மேற்கொண்டு லஞ்ச்சீற் பாவனையினை மேற்கொள்ளும் உணவங்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு நீதிமன்றில் முற்படுத்துமாறே அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் தற்போது உணவங்களில் லஞ்ச்சீற் பாவனை தடுக்கப்பட்டுள்ள அதேநேரம் யாழ். மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் உள்ள சகல வர்தக நிலையங்களும் இந்த ஆண்டின் நிறைவின் பின்னர் தமது லஞ்ச்சீற் விற்பனையினையும் முழுமையாக நிறுத்துவதே உசிதமானது. 

அதே போன்று மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் உள்ள திருமண மண்டபங்களும் தமது உணவு விநியோகங்களின் போது லஞ்ச்சீற் பாவனையை முழுமையாக நிறுத்த வேண்டும். அவ்வாறு தொடர்ந்தும் திருமண மண்டபங்களிற்கும் இதே சட்ட நடவடிக்கை பொருந்தும் என அறிவுறுத்தியுள்ளார்.

பகிரவும்...