Main Menu

பிரதான வேட்பாளர்கள் எவரும் 5 தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கவில்லை – சிவசக்தி ஆனந்தன்

பிரதான வேட்பாளர்கள் யாரும் நேரடியாக இந்த 5 கட்சி தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

நாளைய தினம் வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஒன்று இருக்கின்றது. அக் கலந்துரையாடலில் நீங்களும் கலந்து கொள்கிறீர்களா? ஐந்து கட்சியினுடைய முடிவு இறுதியில் எவ்வாறு அமையப்போகிறது? என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் வவுனியாவிலுள்ள அவரது காரியாலயத்தில் இன்று  ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

மூன்றாம் திகதி கூடுகின்ற கூட்டம் தொடர்பாக எங்களுக்கு எவ்விதமான அழைப்பும் இல்லை.

நாங்கள் ஏற்கனவே ஐந்து கட்சிகளும் கூட்டாக சேர்ந்து 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக் கின்றோம். அந்த 13ஆவது தீர்மானங்கள் தொடர்பாக இந்த சம்பந்தப்பட்டிருக்ககூடிய பிரதான வேட்பாளர்கள் யாரும் நேரடியாக இந்த 5 கட்சி தலைவர்களையும் ஒன்றாக அவர்கள் சந்திக்கவில்லை.

இருந்தாலும் கூட நேற்று முன்தினம் சஜித் பிரேமதாசாவினுடைய தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவந்திருக்கின்றது. அந்த தேர்தல் விஞ்ஞாபனத்திலே என்ன விடயங்கள் சொல்லப் பட்டிருக்கின்றது என்பது தொடர்பாக எங்களுடைய கட்சி இது தொடர்பாக ஆராய்ந்து நாங்கள் இந்த தேர்தலிலே என்ன நிலைப்பாடு எடுப்பது சம்பந்தமாக எங்களுடைய கட்சி முடிந்தால் ஏனைய 5 கட்சிகளும் சேர்ந்து ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கான முயற்சிகள் இந்த வாரத்துக்குள் நடைபெறும் என நான் நினைக்கின்றேன் என  தெரிவித்திருந்தார்.

பகிரவும்...