Main Menu

மோடிக்கு எதிராக விரலை உயர்த்தி பேசினால் கைகளை துண்டிப்போம் – பா.ஜனதா தலைவர் சர்ச்சை பேச்சு

பிரதமர் மோடியையோ, பா.ஜனதா தலைவர்களையோ எதிர்த்து யாராவது விரலை உயர்த்தி பேசினால் அவர்களின் கைகளை துண்டிப்போம் என சத்பால் சிங் சத்தி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் இன்னும் 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற வேண்டி உள்ளது. இதையொட்டி ஒவ்வொரு கட்சியினரும் தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இமாசல பிரதேச மாநிலத்தில் பா.ஜனதா தலைவர் சத்பால் சிங் சத்தி பேசிய பேச்சு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இமாச்சலபிரதேச மாநிலம் மாண்டியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடியையோ, பா.ஜனதா தலைவர்களையோ எதிர்த்து யாராவது விரலை உயர்த்தி பேசினால் அவர்களின் கைகளை துண்டிப்போம்.

இவ்வாறு சத்பால் சிங் சத்தி பேசினார். அவரது இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அவர் ஏற்கனவே காங்கிரச் தலைவர் ராகுல் காந்தி குறித்து சர்ச்சை அளிக்கும் வகையில் பேசி இருந்தார்.

பிரதமர் மோடியை திருடன் என்று ராகுல்காந்தி கூறியதற்காக அவரை கடுமையான வார்த்தைகளில் சத்பால் சிங் விமர்சனம் செய்தார். இதனை அடுத்து ராகுல் காந்தியை பற்றி அவதூறாக பேசியதற்காக 48 மணிநேரம் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது.

தடைக்கு பிறகு சத்பால் மீண்டும் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து சிக்கலில் மாட்டியுள்ளார்.

பகிரவும்...