Main Menu

முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு ஹக்கீம் விடுத்துள்ள முக்கிய விடயம்

முஸ்­லிம்கள் நெருக்­க­டிக்குள் தள்­ளப்­பட்­ட­போது சமூ­கத்தின் அர­சியல் தலை­மைத்­து­வங்கள் ஒற்­று­மைப்­பட்டு செயற்­பட்­ட­து­போன்று, எதிர்­கா­லத்­திலும் அதை செயற்­ப­டுத்­து­வ­துதான் எங்­க­ளது சமூ­கத்­துக்கு சிறந்த வழி­காட்­டி­யாக இருக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் நகர திட்­ட­மிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்­கல்வி அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.


நகர திட்­ட­மிடல் அமைச்­சினால் 28.8 மில்­லியன் ரூபா செலவில் குரு­ணாகல் மாவட்­டத்தில் குரீ­கொ­டுவ பிர­தே­சத்தில் காபட் வீதி­யாக விஸ்­த­ரிக்­கப்­பட்ட சின்­ன­கொல்ல வீதியை நேற்று (28.09.2019) திறந்­து­வைத்த பின்னர் நடை­பெற்ற நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்து உரை­நி­கழ்த்­திய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறி­ய­தா­வது;

தவ­றாக வழி­ந­டத்­தப்­பட்ட சிறி­ய­தொரு கும்­ப­லினால் நடத்­தப்­பட்ட பாரிய அனர்த்­தத்தின் பின்­ன­ணியில் தொடர்ந்தும் வேண்­டு­மென்றே பழி­வாங்­கப்­ப­டு­கின்ற சமூ­க­மாக முஸ்­லிம்கள் இருந்­து­கொண்­டி­ருக்­கின்­றனர். இவற்­றுக்­கெ­தி­ராகப் போராடி, ஓர­ள­வுக்­கா­வது இயல்பு வாழ்க்­கைக்கு திரும்­பு­கின்ற சூழல் உரு­வாகி வரு­கின்­றது. இந்த சூழ்­நி­லையில் எதிர்­கால ஆட்சி தொடர்பில் என்ன முடி­வு­களை எடுக்க­வேண்டும் என்ற நிலைக்கு மக்கள் எல்­லோரும் வந்­தி­ருக்­கின்றோம்.

இந்த நிலை­யிலும் நாங்கள் கடந்­த­கால சம்­ப­வங்­களை மறந்­து­வி­டாமல், சமூ­கத்தின் அர­சியல் தலை­மைத்­து­வங்கள் ஒற்­று­மைப்­பட்டு செயற்­பட்­டதன் விளை­வாக என்ன தாக்­கங்­களை ஏற்­ப­டுத்த முடிந்­ததோ, அதே­போன்று எதிர்­கா­லத்­திலும் இந்த ஒற்­று­மையை பேணு­வ­துதான் எங்­க­ளுக்­கான சிறந்த வழி­யாக இருக்கும் என்­பதை நாம் மனதில் கொள்­ள­வேண்டும். 

நாட்டை பொறுத்­த­மட்டில் முஸ்­லிம்­க­ளு­டைய எதிர்­காலம் குறித்த விட­யத்தில் எல்­லோரும் மூக்கு நுழைக்­கின்ற கால­மாக இது மாறி­யி­ருக்­கின்­றது. வேறு­யாரும் எங்­க­ளு­டைய எதிர்­கா­லத்தை தீர்­மா­னிப்­பதை விட, நாங்­க­ளா­கவே எங்­க­ளது விட­யத்தில் ஆக்­கபூர்­வ­மான முடி­வு­க­ளுக்கு வர­வேண்டும்.

எங்­க­ளது அன்­றாட வாழ்க்­கையில் பிரச்­சி­னைகள் பல­வற்றை நாங்கள் எதிர்­நோக்கிக் கொண்­டி­ருக்­கின்றோம். அடிக்­கடி பல­வி­த­மான கல­வ­ரங்­க­ளையும் அனர்த்­தங்­க­ளையும் அட்­டூ­ழி­யங்­க­ளையும் சந்­தித்­தி­ருக்­கின்றோம். அவற்றின் வெளிப்­பா­டா­கத்தான், குரு­ணாகல் மாவட்­டத்தில் மிகப்­பெ­ரிய அனர்த்­தங்­களை நாம் எல்­லோரும் சந்­திக்க நேரிட்­டது. 

இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கும் முகம்­கொ­டுத்து மீண்­டு­வரும் நிலையில், இல்­லாத பொல்­லாத பழி­களை எங்­க­ளது சமூ­கத்தின் மீது சுமத்தும் நோக்கில் வைத்­திய நிபுணர் ஒரு­வ­ருக்­கெ­தி­ராக அரங்­கேற்­றப்­பட்ட சதி எல்­லோ­ருக்­குமே தெரியும். நாம் நீதி, நியா­யத்­துக்­காக நீண்­ட­நாட்­க­ளாக போரா­டி­ய­போதும், நாட்டில் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­ப­வர்கள் எப்­ப­டி­யெல்லாம் செயற்­பட்­டார்கள் என்­பதை நாம் எல்­லோரும் கண்­கூ­டாகப் பார்த்தோம். 

எந்த ஆதா­ரமும் இல்­லாமல், முஸ்லிம் என்ற கார­ணத்­துக்­காக வேண்­டு­மென்றே பழி­சு­மத்­து­கின்ற விட­யத்தில் நாங்கள் எல்­லோரும் வேற்­று­மை­களை மறந்து தெளி­வாக பேச­வேண்­டிய இடங்­களில் பேசி­யி­ருக்­கிறோம். கடை­சியில் குற்றம் சுமத்­திய எல்­லோரும் வெட்கித் தலை­கு­னி­கின்ற அள­வுக்கு பின்­வாங்க வேண்­டிய ஒரு நிலை­வரம் அவர்­க­ளுக்கு ஏற்­பட்­டது.

இதே விவ­கா­ரங்­க­ளையும் விஷ­மத்­த­ன­மான பிர­சா­ரங்­க­ளையும் அடிப்­ப­டை­யாக வைத்து தான் புதிய பிர­சா­ரங்கள் ஆரம்­பிக்கும். இந்த விட­யங்­களை மனதில் வைத்­துக்­கொண்­டுதான் எதிர்­கால முடி­வு­களை நாங்கள் எடுக்­க­வேண்டும். அச்­சத்தின் அடிப்­ப­டையில் நாங்கள் முடி­வு­களை எடுக்க முடி­யாது. கொஞ்சம் துணி­க­ர­மான விதத்தில் இவற்றை எதிர்­கொள்­வ­தற்கு எங்­களை தயார்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும்.

இது நாங்கள் பிறந்த நாடு. எங்­க­ளு­டைய சந்­த­திகள் வாழ­வேண்­டிய நாடு. அதற்கு கௌர­வ­மான கண்­ணி­ய­மான பின்­பு­லத்தை நாம் அமைத்­துக்­கொள்ள வேண்டும். இதற்­காக எங்­க­ளுக்­கி­ருக்­கின்ற அத்­தனை பலத்­தையும் பிர­யோ­கித்து, தைரி­ய­மாக நியா­யத்­துக்­காக பேசு­கின்ற ஒரு சமூ­க­மாக எங்­களை இனங்­காட்டிக் கொள்ள வேண்டும். 

நெருக்­க­டி­க­ளி­லி­ருந்து இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்­டி­ருக்கும் நிலையில் எங்­க­ளது வாழ்க்­கையை திருப்­தி­க­ர­மாக மாற்­றிக்­கொள்­வ­தற்­கான பின்­பு­லத்தை நாங்கள் அமைத்­தாக வேண்டும். அதற்­காக எங்­க­ளது கைகளில் இருக்கும் வாக்­கு­ரிமை என்ற ஆயு­தத்தை மிகப் பக்­கு­வ­மாக பாவித்­தாக வேண்டும். அப்­போ­துதான் நாங்கள் எதிர்­பார்க்­கின்ற வெற்­றியை அடைந்­து­கொள்ள முடியும்.

போக்­கு­வ­ரத்து வச­தி­களை ஏற்­ப­டுத்தும் நோக்கில் நாங்கள் தற்­போது விஸ்­த­ரித்­துள்ள பாதையை பக்­கத்­தி­லி­ருக்­கின்ற மடிகே கிரா­மத்­துக்கும் அங்­கி­ருக்­கின்ற மக்­க­ளுக்கும் ஏற்­ற­வ­கையில் நீட்­டித்­தர வேண்டும் என்ற கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. எதிர்காலத்தில் அந்த விடயத்தை செய்துகொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

அதேபோன்று இந்த பிரதேசத்தின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றும் நோக்கில் கட்டுபொத்த, பமுனாகொடுவ நீர் வழங்கல் திட்டத்துக்காக தெதுரு ஓயா ஆற்றிலிருந்து நீரைப் பெறுவதற்காக புதிய நீர் வழங்கல் திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளோம். இதன்மூலம் இரு கிராமங்களும் குழாய் மூலமான நீரை பெற்றுக்கொள்ள முடியும். பலவிதமான பிரச்சினைகளுக்கு மத்தியில் அதை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.

பகிரவும்...