Main Menu

முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டினர் நாட்டிற்குள் வரலாம்: நியூஸிலாந்து அறிவிப்பு

முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டினர், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நாட்டிற்குள் வரலாம் என நியூஸிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கொரோனா கட்டுப்பாடுகளை நிர்வகிக்கும் சிறப்பு அமைச்சர் கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறுகையில், ‘கொரோனா தொற்றில் இருந்து நமது நாட்டை பாதுகாப்பாக வைத்திருத்தக நாம் எடுத்த முதல் தீர்க்கமான நடவடிக்கை நமது எல்லைகளை மூடுவது. அதே போல் கொரோனா கட்டுபாடுகளை தளர்த்துவதில் நமது கடைசி நடவடிக்கை எல்லைகளை திறப்பது ஆகும்.

அவுஸ்ரேலியாவில் வசிக்கும் முழுiயாக தடுப்பூசி போட்டுக்கொண்ட நியூஸிலாந்து பிரஜைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 16ஆம் திகதி முதல் நியூஸிலாந்து வரலாம்.

அதே போல் 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நியூஸிலாந்து மக்கள் பெப்ரவரி 13ஆம் திகதி முதல் வெளிநாடுகளுக்கு செல்லலாம். அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 30ஆம் திகதி முதல் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டினர் நியூஸிலாந்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்’ என கூறினார்.

பகிரவும்...