நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்த மேலும் ஒரு அதிகாரி உயிரிழப்பு
கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த மோதலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 6 ஆம் திகதி காலையில் இரண்டாவது தடவையாகவும் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக, சிறைச்சாலை விசேட உத்திகள் பிரிவின் 07 அதிகாரிகள் உயிரிழந்தனர்.
சிறைக்கைதிகளின் கொடூரமான தாக்குதல்களுக்கு இலக்காகியே அவர்கள் உயிரிழந்தனர்.
குறித்த மோதலில் காயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் ஆபத்தான நிலையிலிருந்த 20 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இதேவேளை, மோதலில் உயிரிழந்த 07 சிறைச்சாலை அதிகாரிகளினதும் உடலங்கள் இறுதி அஞ்சலிக்காக இன்று (08) காலை வெலிக்கடை சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் குறித்த அதிகாரிகளின் உறவினர்கள், நெருங்கியவர்கள் மற்றும் அவர்களுடன் கடமையாற்றிய சக அதிகாரிகளின் கண்ணீர் மற்றும் சோகத்திற்கு மத்தியில் உடலங்கள் கொண்டு வரப்பட்டன.
