Main Menu

முதல் முறையாக இராணுவ வீரருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்

இந்தியாவில் முதல் முறையாக 34 வயது இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

அந்த இராணுவ வீரர் காஷ்மீர் லடாக் பகுதியில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் லே பகுதியில் உள்ள சுஹாட் கிராமத்திற்கு விடுமுறையில் சென்றார். அப்போது அவரது தந்தை யாத்திரைக்காக ஈரான் சென்று விட்டு கடந்த மாதம் 27 ஆம் திகதி விமானம் மூலம் நாடு திரும்பினார்.

தந்தையை பார்த்து விட்டு அவர் கடந்த 2 ஆம் திகதி பணியில் சேர்ந்தார். இதற்கிடையே அவரது தந்தை கொரோனா அறிகுறியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த ரத்த பரிசோதனை முடிவில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று இருந்த தந்தையை இராணுவ வீரர் சந்தித்ததால், அவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து அவருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது மனைவி, 2 பிள்ளைகள் மற்றும் சகோதரியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பகிரவும்...