Main Menu

முகமூடி அணிவதற்கான தடை அடிப்படை உரிமை மீறலாகும் : ஹொங்கொங் உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

ஹொங்கொங்கில் புதிய கைதி பறிமாற்ற சட்டமூலகத்தை முற்றிலும் கைவிடுவதாக ஹொங்கொங் நிர்வாகம் அறிவித்திருந்த போதும், சீனாவிடம் இருந்து சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையுடன் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்றும் கலகமடக்கும் பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டது.

பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த ஹொங்கொங் பல்கலைக்கழகத்திலிருந்து பலர் கயிற்றின் மூலம் வெளியில் இறங்கி இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றனர்.

போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொலிடெக்னிக் பல்கலைக்கழகத்தைவிட்டு தப்பிக்க முயன்ற சுமார் 100 பேர் பொலிஸாரின் கண்ணீர் புகைகுண்டு மற்றும் ரப்பர் குண்டுகளால் தாக்கப்பட்டனர். அவர்களில் சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹொங்கொங்கில் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்துக்கான அண்மைய களமாக குறித்த பல்கலைக்கழகம் மாறியுள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்த வன்முறையில் 116 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது அண்மைக் காலங்களில் நடைபெற்ற மிக மோசமானதொரு வன்முறை சம்பவமாக கருதப்படுகின்றது.

சர்ச்சைக்குரிய சட்டமூலத்திற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தற்போது அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் போராட்டமாக வளர்ந்துள்ளது.

அதேவேளை, போராட்டக்காரர்கள் முகமூடி அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை, அரசமைப்புக்கு எதிரானது என ஹொங்கொங் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

‘எங்களது இறையாண்மை மற்றும் ஹொங்கொங்கின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க எங்களிடம் உள்ள உறுதியை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என சீனா எச்சரித்துள்ளது.

நிலைமை கை மீறிச் சென்றால் அரசாங்கம் கையைக் கட்டி கொண்டு வேடிக்கை பார்க்காது’ என பிரித்தானியாவுக்கான சீனத் தூதர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...