Main Menu

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வாயு கசிந்து விபத்து- 15 பேர் பலி

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வாயு கசிந்து ஏற்பட்ட வெடி விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.

சீனாவின் சாங்ஷி மாகாணத்தில் உள்ள பியாங்கோ கவுண்டியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. நேற்று அந்த சுரங்கத்தில் 35 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென நிலக்கரி சுரங்க வாயு கசிந்து வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். வெடி விபத்திலிருந்து 11 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, மீத்தேன் மற்றும் ஹைட்ரஜன் சல்பைட் ஆகியவை நிலக்கரி சுரங்க வாயுக்களில் முக்கியமானவை ஆகும். நிலக்கரி சுரங்க மீத்தேன் வாயு சுரங்கத்தினுள் உள்ள காற்றினில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த வாயு வளிமண்டலத்திற்கு மீத்தேன் கட்டுப்பாடின்றி வெளியாவதை தடுக்க உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...