Main Menu

மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓபிஎஸ்

இலங்கை கடற்படையின் தொல்லை இல்லாமல் மீனவ மக்கள் மீன்பிடி தொழில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேவையேற்பட்டால் வெளியுறுவுத்துறை அமைச்சகத்தின் உதவியை பெற்று, மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும், உத்தரவாதம் வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஜுன் மாதம் 30 இல் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

அப்போதிருந்தே தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், அவர்களின் வலைகளை அறுத்து கடலில் வீசி எறியும் சம்பவங்களும் தொடர்வாதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்படையின் செயல் மீனவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்களின் வருமானமும் குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே மீனவ மக்கள் மீன்பிடி தொழில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதுடன், மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கம் உத்தரவாதம் வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் வலுயுறுத்தியுள்ளார்.

பகிரவும்...