Main Menu

மியன்மார் போராட்டம்: பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த 628பேர் விடுவிப்பு!

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு, பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த 628பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யாங்கூன் நகரின் இன்செயின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள், பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விடுவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் எனவும் போராட்டத்தின் சின்னமான மூவிரல் வணக்கம் செலுத்தியவாறு அவர்கள் உற்சாகத்துடன் சிறையிலிருந்து வெளியே வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையே, இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 2,812 பேருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மியன்மார் அரசியல் கைதிகள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் 2,418பேர் தொடர்ந்து சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஜனநாயக அரசாங்கத்தை மீண்டும் அமைக்க வலியுறுத்தியும் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை விடுவிக்கக் கோரியும் மியன்மார் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின்போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 275 பேர் உயிரிழந்ததாக மியன்மார் அரசியல் கைதிகள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

பகிரவும்...