Main Menu

மியன்மாரில் செயற்கைக் கோள் தொலைக்காட்சி சேவைகளுக்குத் தடை!

மியன்மாரில் செயற்கைக் கோள் தொலைக்காட்சி சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் தொலைக்காட்சி இனி சட்டப்பூர்வமானது அல்ல எனவும் அவ்வாறு சட்டத்தை மீறுபவர்கள் அல்லது செயற்கைக் கோள் ஊடானன தகவல்களைப் பயன்படுத்துவோர் கைதுசெய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் குற்றத்துக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் 320 டொலர் அபராதமும் விதிக்கப்படும் என மாநில தொலைக்காட்சியான எம்.ஆர். டிவி தெரிவித்துள்ளது.

குறித்த ஊடகங்கள், தேசிய பாதுகாப்பையும், சட்டத்தின் ஆட்சியையும், பொது ஒழுங்கையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செய்திகளை ஒளிபரப்பி தேசத்துரோகம் செய்பவர்களை ஊக்குவிப்பதாக அந்நாட்டு இராணுவத் தலைமை குறிப்பிட்டுள்ளது.

மியன்மாரில், கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதனை எதிர்த்து மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாதுகாப்புப் படையினர் போராட்டங்களைத் தடுப்பதற்கான துப்பாக்கிச் சூடுகளை மேற்கொண்டுள்ளதோடு ஊடகங்கள் மீதும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதனிடையே, மக்களி மீதான பாதுகாப்புத் தரப்பினரலின் தாக்குதலில் இதுவரை 760 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், செய்திகளை வெளிக்கொண்டுவந்த குறைத்தது 50 சுயாதீன ஊடகவியலாளர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...