Main Menu

மாநகரசபைத் தேர்தல் 2020 : ஆன் இதால்கோ பெரும் வெற்றி.

நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலில் பரிசின் முதல்வர் ஆன் இதால்கோ மீண்டும் வெற்றிவாகை சூடியுள்ளார்.  (வெற்றி உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆன் இதலாகோ பரிஸ் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இப்புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.) 

 இவர் சோஷலிசக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். முதலாம் சுற்றில் அதிகளவிலான வாக்குக்களைப் பெறாத போதும், இரண்டாம் சுற்றில் அதிக வாக்குகள் பெற்று மீண்டும் முதல்வர் ஆகியுள்ளார்.  ஏனைய இடங்களின் நிலவரம் :  Bondy நகரில் அதிர்ச்சி தரும்விதமாக முதல்வர் Sylvine Thomassin தோல்வியடைந்துள்ளார்.  Créteil நகரில் சோஷலிசக் கட்சியைச் சேர்ந்த Laurent Cathala மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  Colombes நகரில் தற்போதைய முதல்வர் Nicole Goueta தோல்வியடைய, பசுமைக் கட்சியைச் சேர்ந்த  Patrick Chaimovitch வெற்றி பெற்றுள்ளார். 

பகிரவும்...