Main Menu

மனித உரிமை மீறல்கள் குறித்த மிச்சேல் பச்செலெட்டின் அறிக்கையை நிராகரிக்க தீர்மானம் – அரசாங்கம்

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையை நிராகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த அறிக்கை குறித்து ஏற்கனவே எழுத்து மூலம் இலங்கை பதிலளித்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

இருப்பினும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றும்போது அது மீண்டும் பகிரங்கப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முக்கிய தீர்மானங்கள் 30 கீழ் 1 மற்றும் 40 கீழ் 1 வழியாக வழங்கப்பட்ட ஆணைகளை மீறி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

17 பக்கங்கள் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...