Main Menu

மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான குற்றச் சாட்டுகளிற்கு உரிய ஆதாரங்களுடன் பதில் – ரம்புக்வெல

எதிர்வரும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை அமர்வில் இலங்கை தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளிற்கு ஆதாரத்துடன் பதிலளிக்கும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானரீதியான ஆதாரங்களுடன் முழுமையான பதில் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஏற்கனவே மனித உரிமை பேரவையின் தீர்மானம் குறித்த இலங்கையின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளார் என ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய அரசாங்கம் தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கியதிலிருந்து இலங்கை பல பிரச்சினைகளை சந்தித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய அரசாங்கம் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கியபோதிலும் அதனை நிறைவேற்றுவதற்கு அரசமைப்பில் இடமில்லை என அவ்வேளை வெளிவிவகார அமைச்சராகயிருந்த திலக்மாரப்பன தெரிவித்திருந்தார் என ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை அமர்வில் கலந்துகொள்ளும் இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தலைமதாங்குவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...