Main Menu

மக்ரோனின் தேர்தல் வாக்குறுதிகள்!

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதை அடுத்து, தற்போது பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இன்று வியாழக்கிழமை மாலை அவர் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தார்.

100 திட்டங்கள்.

ஜனாதிபதி மக்ரோன் தனது தேர்தல் பரப்புரையில் ‘100 திட்டங்களை’ அறிவித்துள்ளார். குறித்த திட்டங்களை விளக்கும் 24 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

ஓய்வூதிய வயதெல்லை.

ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்க மக்ரோன் திட்டமிட்டுள்ளார். ‘நாம் நீண்ட காலம் வாழுகிறோம். எனவே நீண்ட காலம் உழைக்கவேண்டும்!’ என மக்ரோன் அண்மையில் அறிவித்திருந்ததை மீண்டும் உறுதி செய்துள்ளார்.

ஆசிரியர்களுக்காக ஊதியம்.

ஆசிரியர்களுக்கு ஊதியத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை மக்ரோன் அறிவித்தார்.

தனி பெற்றோருக்கான கொடுப்பனவு.

பெற்றோர்களில் ஒருவரை மட்டுமே தலைமையாக கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை மேலும் அதிகரிப்பதாக மக்ரோன் தெரிவித்தார். 50% வீதத்தால் இந்த அதிகரிப்பு இருக்கும் எனவும், பிள்ளை ஒருவருக்கு வழங்கப்படும் 116 யூரோக்களுக்கு பதிலாக 174 யூரோக்கள் வழங்கவும் மக்ரோன் உறுதியளித்தார்.

அனைவருக்கும் வேலை!

ஜனாதிபதியின் அடுத்த வாக்றுதியாக, பிரெஞ்சு மக்களுக்கு 100% வீத வேலைவாய்ப்பு வழங்க அவர் உறுதியளித்துள்ளார். Pôle emploi எனும் பெயரை France travail ஆக மாற்றி, “அனைவருக்கும் வேலை” எனும் திட்டத்தை நோக்கி பயணிக்க உள்ளதாகவும் மக்ரோனின் தேர்தல் பரப்புரை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதியோர் காப்பகங்கள்.

முதியோர் காப்பங்க

ஓய்வூதியம், பாதுகாப்பு, வேலைவாய்ப்பு. பாடசாலைகள். கல்வி என பல திட்டங்களை அறிவித்துள்ளார். அதன் சில மேலதிகத் திட்டங்கள்  

வருடத்திற்கு 50 பில்லியனும் வருமானவரிக் குறைப்பும்!! வருடத்திற்கு 50 பில்லியன் (50 milliards = 50.000 மில்லியன்) யூரோக்கள் தனது வருங்காலத் திட்டங்களிற்குத் தேவைப்படும் என எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். இதில் 15 பில்லியன் யூரோக்கள் வருமானவரிக் குறைப்பினால் ஏற்படும் இடைவெளியை நிரப்ப உபயோகிக்கப்படும். வருமானவரி, வதிவிட வரி நீக்கம், மற்றும் தொலைக்காட்சி உபயோக வரி நீக்கம் போன்றவற்றிற்காக இந்தப் பதினைந்து பில்லியன் உபயோகிக்கப்படும். அத்துடன் வருடாந்தம் 25 பில்லியன் யூராக்கள் வீதம் தொடர்ச்சியாகப் பத்து வருடங்களிற்கு ஆராய்ச்சிகள், மருத்துவ ஆய்வுகள் போன்றவற்றிற்காக ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் எமானுவல் மக்ரோன். 

200 ஜோந்தார்ம் படையணிகள்!! 8500 நீதிபதிகள் உள்ளகப் பாதுகாப்பு மற்றும் நீதி பரிபாலனத்திற்காக எமானுவல் மக்ரோன் மேலதிகமாக 200 ஜோந்தாரம் படையணிகளை உருவாக்க உள்ளார். இதன் மூலம் நிலையான குற்றவியல் தண்டனைகள் மற்றும் அபராதங்களை நீட்டிக்க முடியும் என மக்ரோன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அத்துடன் 8500 நீதிபதிகள் மற்றும் சட்டவியலளர்களையும் உருவாக்க உள்ளார். இதன் மூலம் தாமதிக்கப்டும் நீதி விசாரணைகளை துரிதமாக நடாத்தி நீதி வழங்கப்படும் எனவும், மேலதிக நீதிபதிகள் மற்றும் சட்டவியலாளர்களை உருவாக்குவதன் மூலம் அவர்களின் வேலைத் தகுதியை மேம்படுத்த முடியும் எனவும் திட்டமிட்டுள்ளார்.  

முதியோர் இல்லங்கள் – 50.000 மருத்துவத் தாதிகள்! அண்மைக்காலங்களில் மற்றையவர் தயவுடன் மட்டும் வாழக்கூடிய முதியோர் இல்லங்களான நுர்Pயுனு களின் பராமரிப்புத் தரம் மிகவும் மோசமாக அமைந்து பெரும் சிக்கல்களை உருவாக்கி உள்ளது.நான் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் இந்த நிலையைச் சீர்திருத்தவும் மேம்படுத்வும் 50.000 மருத்துவத் தாதிகள் மற்றும் பாராமரிப்பாளர்களை பணிக்கு அமர்த்துவதுடன், இதன் கட்டமைப்புகளும் சீர் செய்யப்படும்.  அத்துடன் இந்த முதியோர் இல்லங்களின் செயற்பாடு மற்றும் தரத்தினைப் பரிசோதிக்க, பொதுப்படையான கண்காணிப்பாளர்கள் பணிக்கமர்த்தப்டுவார்கள். இவர்கள் திடீர் திடீரென ஒவ்வொரு முதியோர் இல்லங்களிற்குள்ளும் நழைந்து கண்காணிப்பார்கள்.

ளுக்கு மேலதிக வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும், 50,000 தாதிகளை பணிக்கு அமர்த்தவும் மக்ரோன் உறுதியளித்துள்ளார்.

அகதிக்கோரிக்கை மீதான கட்டுப்பாடு.

குடிவரவு மற்றும் அகதிகளின் தஞ்ச கோரிக்கைகளில் மிக இறுக்கமான கட்டுப்பாடுகள் கொண்டுவர உள்ளதாக மக்ரோன் தெரிவித்தார். பிரான்சில் தஞ்சம் பகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், நிராகரிக்கப்பட்டவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார். அதேபோல், பொது சட்டதிட்டங்களை மதிக்காத தஞ்ச கோரிக்கையாளர்கள் மீது கட்டும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மக்ரோன் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவைகள் உள்ளிட்ட 100 வாக்குறுதிகளை மக்ரோன் வெளியிட்டார்.

அண்மைய கருத்துக்கணிப்புக்களின் படி, இம்மானுவல் மக்ரோனே மீண்டும் ஜனாதிபதியாக வர வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...