Main Menu

எனது திட்டங்களைத் தனது திட்டங்களாக பிரதியெடுத்த மக்ரோன் – வலெரி பெக்ரெஸ்

இன்று எமானுவல் மக்ரோன் தனது தேர்தல் வாக்குறுதிகளையும் தனது ஆட்சியில் அடுத்த பத்தாண்டுகளிற்கான திட்டங்களையும் இன்றைய பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் இவையனத்தும் தனது திட்டங்களத் திருடிப் பிரெதியெடுத்து எமானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார் எனவும், தனது திட்டங்களைப் பிரதியெடுத்தாலும், அவர் எலிசேயில் பதவியில் இருப்பதால், என்னை மீறி அதைத் தனது திட்டம் வாதிடலாம் என குடியரசுக் கட்சியான Les Républicains கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் வலெரி பெக்ரஸ் விசனம் தெரிவித்துள்ளார். இன்று எமானுவல் மக்ரோன் அறிவித்திருக்கும் ஓய்வூதியம், அணுசக்தி, சுளுயு அனைத்தும் அப்பட்டமான எனது திட்டங்களின் பிரதி எனத் தனது எதிர்வினையை வலெரி பெக்ரஸ் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...