Main Menu

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகள் தீவிரம்

இந்தியா முழுவதும் 96 மக்களவைத் தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் வாக்குச்சாவடிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தலுக்காக மொத்தம் 269 பேர் போட்டியிடவுள்ள நிலையில் 5.99 கோடி பேர் வாக்களிக்கத் தகுதியானவர்கள் எனத் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
பிரச்சாரப் பணிகள் நேற்று மாலையுடன் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன

அத்துடன் தொகுதிக்குத் தொடர்பில்லாமல் கட்சி பணிக்காக வெளியூர்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் நேற்று மாலையே, தொகுதியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.  இந்தநிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 67,720 வாக்குச்சாவடி மையங்களிலும் உச்சக்கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் துணை ராணுவம் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 160 ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளர்h.

இதுதவிர தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் காவல்துறையினரும் 16,000 துணை ராணுவத்தினரும் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ளதாகக் கூறப்படுகிறது

பகிரவும்...