Main Menu

மகாத்மா காந்தியின் நினைவாக நாணயம் ஒன்றை வெளியிட பிரித்தானியா திட்டம்

இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட பிரித்தானியா அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட றோயல் மின்ட் அட்வைஸரி குழு ஆலோசித்து வருகிறது என பிரிட்டிஷ் நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

மேலும் காந்தி கருப்பு மற்றும் ஆசிய ,பிற சிறுபான்மை இன மக்களை அங்கீகரிப்பதற்காக அரும்பாடுபட்டார் என்பதை ஆலோசனை குழுவிடம் தெரிவித்து உள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில் மின் அஞ்சல் ஒன்றினை வெளியிட்டுள்ள திறைசேரி, “காந்தியை நினைவுகூரும் வகையில் நாணயத்தை ஆர்.எம்.ஏ.சி தற்போது பரிசீலித்து வருகிறது” என தெரிவித்துள்ளது.

1869 இல் பிறந்த காந்தி, தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சைவழியினை கடைப்பிடித்தது மட்டுமல்லாமல் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். இதன் காரணமாக அவரது பிறந்த நாளான ஒக்டோபர் 2 ஆம் திகதி சர்வதேச அகிம்சை தினமாக அனுசரிக்கப்படுகிறது.

பெரும்பாலும் இந்தியாவின் “தேசத்தின் தந்தை” என்று குறிப்பிடப்படும் மகாத்மா காந்தி பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியாவை விடுவிப்பதற்கு சில மாதங்களுக்குப் பின்னர் 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

பகிரவும்...